Bigg Boss 8 : ஒட்டுமொத்த கூட்டத்தையும் லெஃப்ட் ரைட் வாங்கிய விஜய்சேதுபதி : நடந்தது என்ன? | Day 6
பிக்பாஸ் வீட்டின் முதல் வார பஞ்சாயத்து ஷோ என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. வீட்டுக்குள் சாச்சனா என்ட்ரி, 24 மணிநேர நாமினேஷன், ரவி-ரஞ்சித் ப்ராங்க் ஷோ, ஆண்களிடம் இருக்கும் ஒற்றுமை என பல விஷயங்களை பேசினார் விஜய்சேதுபதி.
முதல் வார அனுபவம் :
ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தி நிகழ்ச்சியைத் தொடங்கினார் விசே. ''இல்லத்துல இருக்குற செல்லத்த'' என்றது குட் ஸ்டார்ட். ''உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் முதல் வாரம். உங்களுக்கு இந்த முதல் வாரம் எப்படி இருக்கு'' என்றார் விஜய் சேதுபதி. அனைவரின் பதிலும் ஒரே மாதிரியே இருந்தது. ''நல்லா இருந்துச்சு, நிறைய புரிஞ்சுக்கிட்டேன். ஜாலியா இருந்துச்சு''ன்னு ரிப்பீட் மோடில் கூறினார்கள்.
''ஒரு வாரத்துல போய்டுவேன்னு சொன்னீங்களா?'' என்று கேட்க, ''நான் பண்ண சேட்டை அப்படி'' என்றார் ரவீந்திரன். ''பிக்பாஸ் வீட்டுக்குள்ள போயும் ரிவ்யூ பண்ணிட்டு இருக்கீங்களா'' என்று அட்டாக் செய்தார் விசே.
''ரியல் மனுஷன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, இங்க ஃபேக்-குனு விருது வாங்கிருக்கேன்'' என்று ரஞ்சித் சொல்லவும், ''உங்க குழந்தைங்க மனசுல நீங்க எப்போதுமே ரியல் தான். அதுல எந்த ட்வுட்டும் இல்ல. இது உங்களுக்கு கொடுத்த பட்டமும் இல்லை. இது விளையாட்டு தான். விளையாட்டுல கொடுத்ததா மட்டும் எடுத்துக்கோங்க'' என ரஞ்சித்தை ஆசுவாசப்படுத்தினார் விசே.
''உங்களுக்கு வயசே ஆகலை சார். 'மறுமலர்ச்சி' படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்'' என ரஞ்சித்தை சிரிக்க வைத்தது நன்றாக இருந்தது.
''உன்கிட்ட ஒரு வாரம் எப்படி இருந்துச்சுன்னு கேட்க முடியாது. இரண்டு நாள் தான் பிக்பாஸ் வீட்டுல இருந்தல்ல'' என்று கேட்க, ‘ஆமாப்பா… எல்லோரும் சேர்ந்து வெளிய அனுப்புனதை விட, நீங்க குடுத்த டிராஃபியை உடைக்க சொன்னதும் ரொம்ப உடைஞ்சிட்டேன். அதுக்கப்புறம் உள்ள வந்ததும், நீங்க கடைசியில கொடுக்கப்போற டிராபியை வாங்காம போகக் கூடாதுன்னு முடிவெடுத்திருக்கேன்'’ என உறுதியாக பேசினார் சாச்சனா.
அடுத்து, ''வார்த்தைய பார்த்து பயன்படுத்ததும்னு கத்துகிட்டியா ? ஒருத்தங்க பேசுறதை கேட்காம நீ பேசுறது தப்புனு கத்துக்கிட்டியா? காது கொடுத்து கேட்குறது ரொம்ப முக்கியம்’' என்று போகுற போக்கில் ஜெஃப்ரியை ஒரு கடிகடித்தார் விசே.
வீடு இரண்டு..சரியா தப்பா ?
தனி படுக்கையை மட்டும் டார்கெட் செய்து பெண்கள் வீட்டை தேர்ந்தெடுத்தது தப்பான மூவ் என்பதை சொல்லாமல் விளக்கினார் விசே. அதற்கு, ''படுக்கையை மட்டும் தியாகம் செய்திருந்தா நிறைய அட்வான்டேஜ் இருக்குற வீடு கிடைச்சிருக்கும். கொஞ்சம் முட்டாள் தனம் பண்ணிட்டோம்'’ என்று சுனிதா ஒத்துக்கொண்டார்.
''நாம செய்யுற தவறு நமக்கு தெரியாது. அதுக்கப்புறம், நாம செய்த தவறை நிரூபிக்க நினைக்குறதுனால தப்பை உணரவும் முடியாது. தவறை உணர்ந்து ஒத்துக்கணும்’' என்று அனைவருக்கும் ஒரு தத்துவத்தை போட்டார் விஜய்சேதுபதி. 'சரி… இப்போ என்னய்யா பண்ண சொல்லுற' என்பதாகவே அனைவரின் ரியாக்ஷனும் இருந்தது.
அடுத்ததாக, தனித்தனி படுக்கை, உடை வைக்க தனி வாட் ரோப், பெரிய கண்ணாடி என கன்ஃபர்ட் ஆக இருக்கலாம் என இந்த வீட்டை தேர்ந்தெடுத்தோம் என பெண்கள் கூற, இந்தப்பக்கம் ஆண்களின் பதிலாகவும் அதுதான் ஆரம்பத்தில் இருந்தது. பதிலடியாக, ''நீங்க யாரும் என்டர்டெயின் பண்ண போகல... கம்ஃபர்ட்டாக இருக்கலாம்னு போனீங்களா?'' என்று காட்டமாக பேசினார் விஜய் சேதுபதி.
இந்த கோபத்துக்கு காரணமும் இருக்கிறது. ஏனெனில், ஒருவாரமாகியும் நல்ல கன்டென்ட் வரவில்லை. யாரும் என்டர்டெயின்மென்ட்டும் செய்யவில்லை என்பதே திட்டுக்கு பின்னால் இருக்கும் திட்டம். ‘இனிமேலாவது ஒழுங்கா விளையாடுங்கடா அப்ரசென்ட்டிகளா’ என்றே தோன்றியது.
விஜய்சேதுபதியிடம் இருக்கும் ப்ளஸ் 'இவர் என்னை திட்டுறாரா, கொஞ்சுறாரான்னே தெரியலையே’ என்பதுதான். ''ரொம்ப நேரம் பேசாதீங்க. போர் அடிக்கிது சார். என்னை குழப்பாதீங்க. ஷார்ட் & ஸ்வீட்டா சொல்லுங்க'’ என்று விசே சொல்வதை சிரித்தபடியே கேட்டுக்கொள்கிறார்கள் ஹவுஸ்மேட்ஸ்.
ஃபைனலாக, ''உங்க கன்ஃபர்ட்-ல இருந்து வெளிய வாங்க. நிறைய எண்டர்டெயின் பண்ணுங்க. கன்டென்ட்டோட விளையாடுங்க'' என்றார் விசே.
சாச்சனா ரீ-என்ட்ரி!
'' 'காது வலிக்குது... கத்தாத' அப்டின்னு மத்தவங்களை டிரிகர் பண்ணுற வார்த்தைய யூஸ் பண்ணாதீங்க''ன்னு ஜாக்குலினையும் தர்ஷாவையும் போகுற போக்கில் செய்துவிட்டது சூப்பராக இருந்தது. அப்பா என தொடங்கிய சாச்சனா நிகழ்ச்சி நடுவே சார் என்று விஜய்சேதுபதியை அழைத்தார். அதற்குள் அவரை அப்பா என்று அழைக்க வேண்டாம் என உத்தரவு வந்ததா என்று தெரியவில்லை.
''நீயே போகுறேன்னு சொன்னீல்ல, வெளிய போகும் போது எதுக்கு ஃபீல் பண்ணுற. நான் சொன்னதை வச்சே என்னை வெளிய அனுப்பிட்டாங்கன்னு ஏன் சொல்லுற?'’ என்று சாச்சனாவை லாக் செய்தார் சேதுபதி. அப்பாவின் கேள்விகளுக்கு சொதப்பலாக பதில் சொன்னார். '‘over confidence-ஆ இருக்குறியோ?'’ என்று சேதுபதி சொன்னதன் பின்னால் பெரிய அர்த்தம் இருக்கும்போல.
''24 மணிநேர நாமினேஷன்ல சாச்சனாவை மாட்டிவிட்டு தப்பிச்சீங்க. பிறகு, செஃப் நாமினேஷன் ஏன் பண்ணீங்க?'' என்ற கேள்விக்கு ''முதல்ல செஞ்ச தப்பை மறுபடியும் செய்ய வேண்டாம்னுதான் நானே என்னை நாமினேஷன் பண்ணிக்கிட்டேன்'' என்றார் ஃபேட் மேன்.
அடுத்ததாக, ரஞ்சித் செஃப் நாமினேஷன் குறித்து விசே கேட்டதுக்கு, ''ப்ராங்க் ஷோ தப்பா போய்டுச்சுன்னு கவலைப் பட்டேன். வீட்டுல இருந்த பெண்கள் பயந்தது, ஏமாந்ததுன்னு எனக்கே நான் பண்ணது தப்புனு தோணுச்சு'' என்று காரணத்தை எதார்த்தமாக பதிவு செய்தார் ரஞ்சித்.
பஞ்சாயத்து ஸ்டார்ட்!
பிக்பாஸ் சீசன் 8 வீக்கெண்ட் பஞ்சாயத்தாக ப்ராங்க் எடுக்கப்பட்டது. அதைப்பற்றி தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினார் விசே.
Prank gone Wrong என்று தீபக் சொன்னதுதான் எல்லோரின் கருத்தாகவும் இருந்தது. ப்ராங்க் ஆகவே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனா, நாமினேஷனுக்காக இதை செய்ததாகச் சொன்னது தான் பிரச்னையாக வெடித்தது. அதோடு, ரஞ்சித்துக்காக ரவீந்திரன் செய்யவில்லை.
ரவீந்திரன் அவருக்காக இந்த பிராங்கை செய்துகொண்டார். எங்களையெல்லாம் பயன்படுத்திக் கொண்டார் என்பதே ஆண்களின் குற்றச்சாட்டாக இருந்தது.
''நீங்க சத்தமா பேசுறதுனால உங்க மேல சந்தேகம் வருது’' என்று ரவீந்திரனை தாக்கினார் சேதுபதி. சொல்லப்போனால், இன்றைய ஷோ முழுவதும் போட்டியாளர்கள் நீளமாக பேசினாலோ, புரியாமல் பேசினாலோ உடனே அவர்களை கட் செய்து விஷயத்துக்கு வர சொன்னது விசே ஸ்டைல் ஆக இருந்தது.
ரவீந்திரன் சுயநலத்துடன் நாமினேஷனுக்காக தான் இந்த பிராங்கை ஆரம்பித்தார் என்பதே அனைவரின் குற்றச்சாட்டாகவும் இருந்தது. ஆனால், ரஞ்சித்துக்காக இதை செய்ய வேண்டுமென அவர் சொன்னபோது தீபக், விஷால், பவித்ரா என எல்லோரும் இருந்ததை போட்டு உடைத்தார் விசே.
எல்லோருக்குமே ஷாக். ரவீந்திரனும் 'உண்மை ஒரு நாள் வெல்லும்' மோடுக்குச் சென்றார். நம்பலைனா வீடியோவைப் போட்டுக்காட்டணுமா என்றதும் ரவீந்திரனுக்கு எதிராக பேசியவர்கள் சைலண்ட் ஆனார்கள்.
பெண்களா ஆண்களா ?
''ஏன் பெண்கள் ஒற்றுமையா இல்லை?'' என்று கேள்வி வைக்கப்பட்டது. ''எல்லோரும் க்ரூப்பிஸமா இருக்காங்க. தனித்தனியா விளையாடுறாங்க. ஒரு லீடர் ஷிப் இல்லை என சொன்னார்கள். அதுபோல ஆண்களிடம் கேட்கும் போது, ஒத்துமையா இருக்கணும்னு முன்னாடியே பேசி முடிவெடுத்திருந்தோம்'' என்றார் தீபக். ''நாங்க எப்போதுமே ஒத்துமையா இருக்கோமானு தெரியலை. ஆனா, முடிஞ்ச அளவுக்கு ஒத்துமையா இருக்கோம்'' என்றார் அருண்.
''ஆண்கள் ஒற்றுமையா இருந்தாலும் தனித்துவம் இல்லை. ஒருவருக்கு பின்னால் ஒருவர் ஒளிஞ்சுக்குறீங்க. ஆனா, பெண்கள் ஒற்றுமையா இல்லைனாலும் தனித்துவமா இருக்காங்க. உங்க தனித்துவத்தை அடுத்தடுத்த வாரங்கள்ள வெளிப்படுத்துங்க'' என்றார். 'வீட்டுக்குள்ள எப்பவுமே இருக்கும் ஃபேன்... என் மனசுக்குள்ல விஜய்சேதுபதி இஸ் மை மேன்’ என்று கவிதையைச் சொல்லி காரசார இடத்தை இனிமையாக்கினார் சுனிதா.
பொதுவாக, வார இறுதியில் அந்த வாரத்தில் நடக்கும் பிரச்னைக்கு பஞ்சாயத்து செய்வார்கள். ஆனால், இந்த வாரம் உப்பு சப்பில்லாத ஒரு பஞ்சாயத்து தான் வந்ததால் வேறு வழியில்லாமல் பிராங்க் சர்ச்சையை வைத்து பஞ்சாயத்து செய்தார் விஜய்சேதுபதி. நீங்க பேசுறது மந்தமா இருக்கு என்று ஒரு இடத்தில் விஜய்சேதுபதி சொல்லியிருப்பார். அப்படித்தான் ஆடியன்ஸூக்கு இன்றைய ஷோவும் இருந்தது.
கடந்த ஏழு சீசனிலும் டாக்ஸிக் நபர்கள் வீட்டுக்குள் இருப்பார்கள். ஷோவும் காரசாரமாக இருக்கும். பஞ்சாயத்துகளும் தரமாக இருக்கும். ஆனால், சேதுபதி சொன்னது போல எல்லோரும் சேஃப் கேம் விளையாடுவதிலும் ஒருவருக்கு பின் பயந்து ஒளிவதாலும் பஞ்சாயத்துமில்லை. காரசாரமுமில்லை… என்டர்டெயின்மென்ட் பத்தவில்லை. அதனால், சேதுபதியின் பஞ்சாயத்து தலைவராக சோபிக்கவுமில்லை..
இன்றைய வீக்கென்ட் ஷோவில் அதாவது, ஏழாவது நாளில் பிக்பாஸ் சீசன் 8 முதல் நாமினேஷன் இருக்கிறது. இதுவரை வந்த தகவல்படி, ரவீந்திரன் வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இன்றைக்கு ஷோ எப்படி இருக்கப் போகிறது, வெளியேறப்போவது யார் என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம்.