Bigg Boss Tamil 8
Bigg Boss Tamil 8Vijay tv

Bigg Boss 8 : குழப்பவாதி தர்ஷா, திருட்டுதனம் செய்த ஜாக்குலின், ஒரு குறும்படம் வெயிட்டிங்! | Day 4

முதலுக்கே வந்த மோசம், மார்னிங் ஆக்டிவிட்டியில் அப்செட் ஆன செளந்தர்யா, தர்ஷா செய்த குழப்பம், திருட்டு ஜாக்குலின், விஷாலின் ஜாலி நடிப்பு என கலகலப்பாக இருந்தது BB TAMIL 8 DAY 04.
Published on

பிக்பாஸ் வீட்டுக்குள் ஆண்கள் அணி விளையாட்டாக செய்தது வினையாகிப் போனது. ஆண்கள் அணி ஜாலியாக செய்ய நினைத்த பிராங்க் பின்னணியில் பெரிய திட்டத்தை வைத்திருந்தார் ரவீந்திரன். அதாவது, பெண்கள் அணியை ஏமாற்றி ஜாலி கன்டென்ட் கொடுக்க நினைத்தது ஆண்கள் டீம்.

ஆனால், இந்த முழு திட்டத்தின் பின்னணியில் ரவீந்திரன் நாமினேஷனிலிருந்து தப்பிக்க இந்த பிராங்க்கை பயன்படுத்த நினைத்தார். இந்த விஷயத்தால் ஆண்கள் டீமும் கொஞ்சம் ஷாக் ஆனார்கள். ‘முதலுக்கே வந்த மோசம்’ என்றாகிப் போனது. நம்ம கைய வச்சி நம்மையே குத்திட்டாரேன்னு ஃபேட்மேனிடம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டுமென நினைக்கிறார்கள்.

Bigg Boss 8
Bigg Boss 8 Vijay tv

''எங்க மளிகைப் பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமா காணாம போகுது. எங்க நூடுல்ஸ் பாக்கெட்டையும் சேர்த்து நீங்க எடுத்து வச்சிருக்கீங்க'' என்று ஆண்கள் மேல் குற்றம் சாட்டுகிறார்கள் பெண்கள். கொஞ்ச நேரத்தில் தப்பா எடுத்துட்டோமோ என்று 2 நூடுல்ஸ் பாக்கெட்டையும் கொடுத்துவிடுகிறார்கள் ஆண்கள். இரவு முடிந்தது. குறிப்பாக தர்ஷா குப்தா ஆண்கள் அணி திருடிட்டீங்க, வெக்கமா இல்லையா என்னும் அளவுக்கு ஓவராக பேசிவிட்டார். மீண்டும் மீண்டும் ஆண்கள் அணி பச்சை மிளகாய், தேங்காய் போன்ற மளிகை பொருட்களை திருடி விட்டனர் என சொல்லி கொண்டே இருந்தார். ஆனால் ஆண்கள் அணி குழப்பதுடன் திருதிருவென முழித்தனர்.

Bigg Boss Tamil 8
Bigg Boss 8 : 'கன்டென்ட் குடோன்’ ரவீந்தர், 'வன்ம குடோன்' ரஞ்சித் மீது பாய்ந்தது ஏன்?| Day 3

நான்காம் நாள் இல்லுமினாட்டி பாட்டுடன் துவங்கியது. காலையிலேயே ஒரு மீட்டிங்கை போட்டார்கள். அதில், இந்த வார நாமினேஷனில் யார் வெளியேற வாய்ப்பு இருக்கிறதென உங்கள் கருத்தைச் சொல்லுங்க என்றார் பிக்பாஸ்.

ஒவ்வொருவரும் மற்றவர்களின் பெயரை கூறினார்கள். அதில் ரவீந்திரன், ரஞ்சித், செளந்தரியா பெயர்களே அதிகமாகச் சொல்லப்பட்டது. இதில், ரஞ்சித்தும் ரவீந்திரனும் ''நானே என்னை நாமினேட் பண்ணுறேன். நான் தான் போவேன்னு நினைக்கிறேன்'' என ட்விஸ்டைப் போட்டார்கள்.

Bigg Boss 8
Bigg Boss 8 Vijay tv

வீட்டுக்குள் இஸ்திரி போட்டுக் கொண்டே, தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருக்கிறார் செளந்தர்யா. ''என்ன இரண்டு மூணு கேம் விளையாடிட்டு, கத்திகிட்டு இருந்தா போதுமா சும்மா சும்மா என்னை சொல்லுறாங்க. வெரி வெரி பேட்'' என்று க்யூட்டாக புலம்பிக் கொண்டார். இன்னொரு பக்கம், ''சாரி ப்ரியா.. என்னை தப்பா நினைச்சிக்காத... நானே என்னை நாமினேட் பண்ணுறேன்னு.. என்னை யாருக்கு பிடிக்குதுனே தெரியலை'' என்று மனைவி பிரியா ராமனிடம் கேமரா முன்பு மன்னிப்புக் கேட்டார் ரஞ்சித். இதுகூட இவரது கேம் பிளானாக இருக்கலாம்.

Bigg Boss Tamil 8
​Bigg Boss Tamil 8 : முதல் நாளே நடந்த சதி : அநீதி நடந்ததாக கொதித்தெழும் ரசிகர்கள்| Day 1

ஜாக்குலின் செய்த திருட்டுத்தனம்!

தீபக்கும் அருணும் அம்மியில் சட்னி அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, மீண்டும் கெணத்த காணும்னு ஆரம்பித்தார் தர்ஷா. ''எங்க மளிகைப் பொருட்களை திருடி வச்சிருக்கீங்க'' என்றார். ''எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏன் இப்படி பண்னுறீங்கன்''னு ஆண்கள் டீமை ப்ளாஸ்ட் செய்தார் தர்ஷா.

உடனடியாக, ஆண்கள் & பெண்கள் டீம் வாங்கிய மளிகைப் பொருட்களின் லிஸ்ட்டை அனுப்பி வைத்தார் பிக்பாஸ். சொல்லப் போனால், பெண்கள் டீம் காணவில்லை என்று கூறிய எந்த மளிகைப் பொருளையும் அவர்கள் வாங்கவே இல்லை. அதோடு, பெண்களின் எந்த மளிகை பொருளையும் ஆண்கள் எடுக்க வில்லை என்பதும் தெரிந்தது.

Bigg Boss 8
Bigg Boss 8 Vijay tv

''திருடன்னுலாம் சொல்லிட்டேனே'' என்று சிரித்துக் கொண்டே சொன்னார் தர்ஷா. இதற்கு நடுவில் இரண்டு நூடுல்ஸ் பாக்கெட்டை வேறு ஆண்களிடம் இருந்து பிடிங்கிவிட்டது பெண்கள் டீம். என்ன பண்ண காத்திருக்காய்ங்களோ என கொஞ்சம் பதட்டத்தில் இருக்கிறார்கள் பெண்கள். ''இதுக்கு ஏன் வெள்ளையும் சொள்ளையுமா திரியணும்'' என நினைத்துக் கொண்டது ஆண்கள் டீம்.

Bigg Boss Tamil 8
ரஞ்சித்திடம் விஜய் சேதுபதிக்கு அப்படி என்ன கோபம்? - முதல் நாள் சம்பவம் #BiggBosstamil8

ஆண்கள் தான் திருடுகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்த தர்ஷாவும் ஜாக்குலினும் சேர்ந்து ஆண்கள் அணியின் கரம் மசாலாவை திருடினார்கள். இந்த திருட்டை நிச்சயம் குறும்படமாக காட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

Bigg Boss 8
Bigg Boss 8 Vijay tv

அப்பா உயர்ந்தவர்... அம்மா சிறந்தவர் !

வீக்லி டாஸ்க்கின் போட்டா போட்டியின் தலைப்பு வந்தது. பெற்றோர்களில் சிறந்தவர் யார்? ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் விவாதத்தை ஆரம்பித்தார்கள். ஜாக்குலினுக்கு சிங்கிள் மதர் என்பதால் அம்மாவை புகழ்ந்தெடுத்தார். பெஸ்ட்டுன்னா அம்மா... மத்ததெல்லாம் சும்மா என்று பேசி முடித்தார்.

தப்பை சுட்டிக் காட்டுறது, உலகத்தை சுத்திக் காட்டுறதுன்னு கெத்துன்னா அப்பா தான்னு பேசினார் அர்னாவ். பெற்றோர்களில் அப்பா உயர்ந்தவர். ஆனா, அம்மா தான் சிறந்தவர் என பெண்கள் அணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

Bigg Boss Tamil 8
விஜய் சேதுபதி : முதல் நாள்… முதல் பிக் பாஸ் மேடை… கமல்ஹாசனை காப்பியடித்தாரா, தனித்து தெரிந்தாரா?!

அதன்பிறகு, மார்னிங் ஆக்ட்டிவிட்டியால் கொஞ்சம் அப்செட்டில் இருந்த செளந்தர்யா எல்லோரையும் அழைத்து தன்னுடைய தரப்பு கருத்தை சொன்னார். ஆனாலும், அப்போதும் தப்பாவே புரிந்துகொள்ளப்பட்டது. ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே என தோன்றியது.

Bigg Boss 8
Bigg Boss 8 Vijay tv

இரவில், ரஞ்சித்தை அப்படியே இமிடேட் செய்து நடித்து அசத்தினார் விஷால். பார்க்கவே அட்டகாசமாக இருந்தது. அதை ரஞ்சித்தும் ரசித்தது சுவாரஸ்ய ரகம். கூடவே, பவித்ராவையும் செய்துவிட்டார் விஷால். செம ஜாலியாக அன்றைய நாள் முடிந்தது. சுவாரஸ்யமாக எதுவும் நடக்கவில்லையென்றாலும், பெண்களின் தவறான புரிதலால் நடந்த குழப்பம், போட்டா போட்டி விவாதம், இரவு ரிலாக்ஸ் என ஓகே ரகத்தில் முடிந்தது.

logo
News Tremor
newstremor.com