‘வள்ளியின் வேலன்’ இன்று : வேலன் மீது காதல் கொண்ட ரேணுகா… ட்விஸ்ட் கொடுத்த வேலன்!
ரேணுகா - வேலனின் முதல் சந்திப்பு!
ரேணுகா மழையில் நனைந்தபடி முதல் முறையாக வேலன் வீடு தேடி வந்த போது அவளை சந்தித்த விஷயங்களை நினைத்து பார்க்கிறாள். அதாவது ப்ளாஷ் கட்டில் வேலன் குடையுடன் இந்த வீட்டுக்கு வந்து வெளியில் நின்றபடி வீட்டை பார்த்துக் கொண்டிருக்க அங்கு வந்த ரேணுகா வேலனை பார்த்த முதல் சந்திப்பிலேயே அவன் மீது காதல் கொள்கிறாள்.
அவனது குடைக்குள் ஓடிவந்து நின்று ‘’யார் நீங்க… என்ன வேணும்’’ என்று விசாரிக்க வேலன் வீடு தேடி வந்ததாக சொல்கிறான். ‘’ஆனா இந்த வீட்டோட ஓனர் பொண்ணு ரொம்ப வாயாடினு சொன்னாங்க… அதான் யோசிச்சிட்டு இருக்கேன்’’ என்று சொல்ல ரேணுகா ‘’அந்த வாயாடி நான் தான்’’ என அதிர்ச்சி கொடுக்கிறாள்.
ஜகா வாங்கிய வேலன்!
உடனே வேலன் இனிமே நமக்கு வீடு கிடைக்காது என அங்கிருந்து கிளம்ப ரேணுகா ‘’வீடு வேண்டாமா’’ என்று கேட்கிறாள். ‘’நீங்க பேச்சிலரா’’ என்று கேட்க வேலன் ‘’இல்ல ஃபேமிலி’’ என்று சொன்னதும் வேலனுக்கு கல்யாணம் ஆகி விட்டதாக நினைத்து ரேணுகா ஷாக் ஆகிறாள். உடனே ‘’ஃபேமிலிக்கு எல்லாம் வீடு கொடுக்கிறது இல்ல’’ என்கிறாள். வேலன் ‘’ஃபேமிலினா அந்த மாதிரி இல்ல… அம்மா, அப்பாவோட இருக்கேன்’’ என்று சொன்னதும் ரேணுகா நிம்மதி அடைகிறாள். உங்களுக்கு வீடு தரேன் எனவும் சொல்கிறாள். ‘’சீக்கிரம் பால் காய்ச்சி குடி வந்துடுங்க’’ என சொல்கிறாள்.
ப்ளாஷ்பேக் டு ரியல்!
ஃப்ளாஷ்கட் முடிய வேலன் வள்ளி வீட்டில் இருந்து நனைந்தபடி வீட்டுக்கு வர அதை பார்த்த ரேணுகா குடையை கொண்டு வந்து பிடிக்கிறாள். பிறகு தலையை துவட்டிக் கொள்ள டவலைக் கொண்டு வந்து கொடுக்க வேலன் ‘’என்கிட்டயே டவல் இருக்கு’’ என்று சொல்ல ரேணுகா ‘’நீங்க இந்த டவலை வாங்குற வரைக்கும் நான் மழையில நனைஞ்சபடி நின்னுக்கிட்டே தான் இருப்பேன்’’ என்கிறாள். ஆனால் வேலன் அவளை கண்டுகொள்ளாமல் வீட்டிற்குள் சென்று விட ஒரு இடி இடித்ததும் ரேணுகா பயந்து இங்கிருந்து ஓடுகிறாள்.
ஜலதோஷத்தில் வள்ளி, வேலன்!
அடுத்த நாள் காலையில் ராஜசேகர பாண்டியன் வீட்டுக்கு வந்த வேலன் ஜலதோஷத்தில் தும்ப அதே நேரத்தில் வள்ளியும் தும்புகிறாள். பிறகு ரத்னவேல் பாண்டியன் வேலைக்கார பெண்ணிடம் மெடிக்கல் பாக்ஸை எடுத்து வர சொல்லி அதிலிருந்து புது இன்ஹேல்ஹரை எடுத்துக் கொடுக்க இதைப் பார்த்த வள்ளி வேலனை மேலே வர சொல்லி அப்பா கொடுத்ததை புடுங்கிக் கொள்கிறாள்.
வள்ளி எடுத்த முடிவு!
வள்ளி காலேஜ் போகணும் என்று சொல்லி வேலனை கூட்டிக்கொண்டு கோயிலுக்கு வர வேலன் ‘’இங்கே எதுக்கு வந்தோம்? காலேஜ் தானே போகணும்னு சொன்னீங்க’’ என்று கேட்க வள்ளி பொய் சொன்னதாகவும் நான் செய்யப் போற வேலை அப்படி என்றும் ரஞ்சனியை பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டாரை காட்ட வேலன் அதிர்ச்சி அடைகிறான். ‘’இந்த கல்யாண விஷயத்துல உங்களால எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு அப்பா சொல்லி இருக்காரு மேடம்’’ என்று சொல்லிக் கொண்டே இருக்க வள்ளி அதை கண்டு கொள்ளாமல் மாப்பிள்ளை வீட்டாரை சந்தித்து பேச வருகிறாள்.
காலில் விழுந்த வள்ளி!
வள்ளி மாப்பிள்ளை வீட்டாரிடம் தனக்கு கல்யாணம் என நினைத்து கல்யாணத்தை நிறுத்துவதற்காக திட்டம் போட்டு இப்படி செய்து விட்டதாக சொல்ல அதை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். ‘’உனக்கே கல்யாணமா இருந்தா கூட இப்படி செய்யலாமா’’ என்று கேட்க ‘’எனக்கு எப்பவும் என் அப்பாவோட இருக்கணும்கிறதுதான் ஆசை… அதனாலதான் இப்படி செஞ்சேன்'’ என உண்மையை உடைக்கிறாள்.
ஆனாலும் மாப்பிளை வீட்டார் ‘’இந்த சம்பந்தம் இனிமேலும் வேண்டாம்’’ என கறார் காட்ட வேறு வழி இன்றி வள்ளி அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு மனசை மாற்றுகிறாள். இதனால் அவர்கள் ‘’ரஞ்சனி தான் எங்க வீட்டு மருமக’’ என்று சொன்னதும் வள்ளி சந்தோஷம் அடைகிறாள்.
வேதநாயகி போட்ட டிராமா!
வீட்டில் ரத்னவேல் பாண்டியன் சாப்பிட உட்கார வேதநாயகி ‘’ரஞ்சனி சோகமாக இருப்பதாகவும் அவளுக்கு இந்த மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்கு’’ என சொல்லி டிராமா போட ரத்னவேல் மாப்பிள்ளை வீட்டாரை பார்த்து பேச கோயிலுக்கு கிளம்பி வருகிறான்.
கோயிலில் வள்ளி மாப்பிள்ளை வீட்டாரை சந்தித்து பேசிக்கொண்டிருக்க ரத்னவேல் காரை விட்டு இறங்குகிறார். வள்ளியை ரத்னவேல் பாண்டியன் பார்த்துவிடுவாரோ என்கிற பில்ட்அப்புடன் முடிந்திருக்கிறது எபிசோட்!