இந்த வாரத்துக்கான கேப்டன் பதவியை வென்றது யார், நேரடி நாமினேஷனில் சிக்கப்போகும் போட்டியாளர்கள், புகுந்த வீடு செல்லும் அந்த இரண்டு போட்டியாளர்கள் என பல எதிர்பார்ப்புகள் இன்றைய எபிசோடில் வெயிட்டிங். இது BB Tamil 8 Day 08.
நாமினேஷன் சதித்திட்டத்தை முந்தைய நாள் இரவே தொடங்கிவிட்டார்கள் ஆண்கள். ''சுனிதா மந்திரி. அவரை அட்டாக் செய்தா சேதாரம் நமக்குத்தான். தர்ஷா ஜோக்கர். தர்ஷா அங்க இருக்குற வரைக்கும் பெண்களுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருப்பார். நாம சேஃப் ஆக விளையாடலாம். தர்ஷாவை எதுவும் செய்ய வேண்டாம். நாம தூக்க வேண்டியது ஜாக்குலின் எனும் குதிரையைத்தான். எப்போ எங்க போகும்னே தெரியாது. கூடவே, ஜாக்குலினின் சிப்பாயா இருக்குற செளந்தர்யாவையும் எலிமினேட் செய்யணும்.
ஏன்னா, இரண்டு பேருக்கும் நடுவுல இருக்குற எமோஷனல் கனெக்ட் உடையணும்'' என்று ஆண்களுக்கு சதிதிட்டம் தீட்ட உதவி செய்கிறார் முத்துக்குமரன். இறுதியாக, ஜாக்குலினையும் செளந்தர்யாவையும் தூக்குவதென முடிவெடுத்து தூங்கச் சென்றார்கள் ஆண்கள் டீம். ஒற்றுமையாக, ஒருவரை நாமினேட் செய்ய முடிவெடுப்பது நல்ல விஷயம். ஆனால், இதில் தனித்துவமான கேம் ப்ளான் இருக்காது என்பது ஆண்களுக்கு புரியவில்லை.
இந்த வாரம் புகுந்த வீடு செல்ல பெண்கள் டீமிலிருந்து தர்ஷாவை அனுப்புவதென பெண்கள் முடிவெடுக்கிறார்கள். ஆண்களுடன் சண்டைப் போட்டு அவர்களை குழப்ப வேண்டும். ஆண்கள் வேலையை கெடுக்க வேண்டுமென்பதே தர்ஷாவை அனுப்புவதன் பின்பு இருக்கும் திட்டம். இன்னொரு பக்கம், பெண்கள் வீட்டுக்கு தீபக்கை அனுப்புவதென ஆண்கள் முடிவெடுக்கிறார்கள். இரண்டுமே ஆடியன்ஸூக்கு சுவாரஸ்யமான கன்டென்ட்டாக இருக்கும்.
இந்த வார கேப்டன்!
அடுத்ததாக கேப்டன் டாஸ்க் ஆரம்பித்தது. இந்த வாரத்துக்கான கேப்டன் டாஸ்கிற்காக ஆண்கள் டீமிலிருந்து விஷால், சத்யா, தீபக் மற்றும் பெண்கள் அணியிலிருந்து ஜாக்குலின், பவித்ரா, செளந்தர்யா விளையாடினர்.
ஆண்கள் பிசிக்கல் டாஸ்க்கில் பல சமயங்களில் ஜெயித்துவிடுகின்றனர். ஆனால் ஆண்களை ஒப்பிடுகையில் பெண்கள் மனதளவில் வலிமை பெற்றவர்கள். ஆண்களுக்கு ஏற்ற டாஸ்க் கொடுத்து பெண்களை வீழ்த்துவது என்ன நியாயம் என்று தெரியவில்லை. ஏனெனில், டாஸ்க் அப்படி. பலத்தால் சத்யா வெற்றி பெறுகிறார். இருந்தாலும், கடைசி வரை மல்லுக்கு நின்ற பவித்ராவுக்குப் பாராட்டுகளை தெரிவிக்கலாம்.
பவித்ரா தவறி கீழே விழும் போது கிடைக்கும் கேப்பில் ஸ்கோர் செய்ய நினைக்கிறார் ஆர்னாவ். ஆனால், பவித்ரா கையை தட்டி விட்டுச் சென்றார். அர்னாவுக்கு பல்ப் தான் மிஞ்சியது. பெண்களுக்கு பிரச்னையென்றால் பதறிவிடுவது அர்னாவ் இயல்பு (அல்லது நடிப்பு). சாச்சனா வீட்டை விட்டு வெளியேறும் போது அவர் துடிதுடித்துப் போனது மீம் மெட்டீரியல் ஆனது.
ஆண்கள் பிசிக்கல் டாஸ்க்கில் பல சமயங்களில் ஜெயித்துவிடுகின்றனர். ஆனால் ஆண்களை ஒப்ப்பிடுகையில் பெண்கள் மனதளவில் வலிமை பெற்றவர்கள். ஆண்களுக்கு ஏற்ற டாஸ்க் கொடுத்து பெண்களை வீழ்த்துவது என்ன நியாயம் என்று தெரியவில்லை.
பெண்கள் சதித்திட்டம்!
இந்த வாரத்துக்கான மளிகை பொருள் வாங்க ஆண்கள் அணியுடன் நீயும் வந்துவிடு என தர்ஷாவுக்கு ஐடியோ கொடுக்கிறார் ஜாக்குலின். அதோடு, விலை அதிகமாக இருக்குற பொருட்களாக எடுத்துப் போட்டு அவங்களுக்கு மளிகை பற்றாக்குறை வர வைக்க தர்ஷாவுக்கு சைலன்ட் அசைன்மென்ட் பெண்கள் அணியிலிருந்து வருகிறது. தர்ஷாவும் மளிகை டாஸ்க்கிற்கு வர விரும்பி ஆண்களிடம் கேட்கிறார். ஆனால், தர்ஷாவை அந்த டாஸ்க்கிற்கு சேர்த்துக் கொள்ளவில்லை. இது, ஆண்களின் குட் மூவ் என்றே கூறலாம்.
கார்டன் ஏரியாவில் அன்ஷிதாவும் தீபக்கும் பேசிக் கொண்டிருக்கும் போது எதார்த்தமாக முத்துக்குமரன் அங்கு வந்தார். அப்போது, அன்ஷிதா ''பெண்கள் டீமிலிருக்கும் போது நல்லா இருந்தீங்க... இப்போ தலைக்கு மேல எதோ இருக்கு. ரொம்ப மோசமா நடந்துக்குறீங்க. திமிரு வந்திருச்சு'' என்று அன்ஷிதா சொல்லவும் ''நான் நல்லவனே இல்லை. நான் விளையாட வந்திருக்கேன். உங்க கிட்ட நல்ல பெயர் வாங்க வரலை'’ என்று அன்ஷிதாவை இன்னும் ட்ரிகர் செய்தார் முத்துக்குமார். காரணமே இல்லாமல் போட்ட இந்த சண்டையைப் பார்க்கும் போது, கன்டென்ட் ஆக வேண்டுமென்றே அன்ஷிதா பேசியது போல இருந்தது.
இந்த வாரத்துக்கான நாமினேஷன் தொடங்கியது. கடந்த வாரம் புகுந்த வீட்டுக்கு சென்று வந்த முத்துக்குமரனுக்கும் பவித்ராவுக்கும் நேரடி நாமினேஷன் வாய்ப்பு கிடைத்தது. அதனால், முத்துக்குமரன் ஜாக்குலினையும், பவித்ரா தீபக்கையும் நேரடி நாமினேட் செய்தார்கள். அதுபோல, பெண்கள் அணியிலிருந்து அதிக நாமினேஷனை ரஞ்சித்தும் ஆண்கள் அணியிலிருந்து அதிக நாமினேஷனை செளந்தர்யாவும் பெற்றார்கள். அதன்படி, ரஞ்சித், முத்து, ஜெஃப்ரி, விஷால், அர்னாவ், சாச்சனா, தர்ஷா , செளந்தர்யா, ஜாக்குலின், தீபக் ஆகியோர் இந்த வார நாமினேஷனில் சிக்கியுள்ளார்கள்.
என்னதான் நாமினேஷன் ஆனாலும் செளந்தர்யாவுக்கு அதிக ஓட்டு விழக் காரணம், பலமான PR டீம் வேலை செய்வதாக ஒரு கருத்து நிலவுவது குறிப்பிடத்தக்கது.
உருட்டு கேம்!
மளிகை பொருட்களை வாங்குவதற்கு உருட்டு கேமை ஆரம்பித்தார் பிக்பாஸ். பசையை உடலில் பூசிக் கொண்டு தரையில் உருண்டு பணத்தை எடுக்க வேண்டும். இதில், சாச்சனா, அர்னாவ் கலந்துகொள்ள தயாராகினர். இந்த கேமுக்காக ரெஸ்ட் ரூம் சென்று தரையில் உருண்டு பயிற்சி எடுத்தார் சாச்சனா... யாருமா நீ ?
முதல் லெவல் உருட்டு கேமில் அர்னாவ் 6200 ரூபாயும், சாச்சனா 4600 ரூபாயும் எடுத்தனர். அதுபோல, லெவல் 2 உருட்டு கேமில் அருண் 2500 , சுனிதா 3000 ரூபாயும் எடுத்தனர். ஆக, பாய்ஸ் 8700 மற்றும் கேர்ள்ஸ் 7600 சம்பாதித்தனர். இதற்குள் ஷாப்பிங் செய்ய வேண்டுமென்பதே டாஸ்க்.
அதன்படி, ஆண்கள் அணியிலிருந்து ரஞ்சித், முத்து, விஷால் ஷாப்பிங் செய்தனர். அதுபோல பெண்களுக்காக சுனிதா, அன்ஷிதா, சாச்சனா ஷாப்பிங் செய்தனர். எவ்வளவு தொகைக்கு ஷாப்பிங் செய்திருக்கிறார்கள் என்பது இன்றைய எபிசோடில் தெரிந்துவிடும்.
தக் லைஃப் மொமன்ட்டில் இருக்கும் சத்யா கேப்டனாக எப்படி இருக்கப் போகிறார், இந்த வாரம் ரஞ்சித் கவனம் ஈர்ப்பாரா, புகுந்த வீடு சென்ற தீபக்- தர்ஷா எப்படி விளையாடப் போகிறார்கள் என பல எதிர்பார்ப்புகளை தூண்டிவிட்டிருக்கிறது இன்றைய எபிசோட்.
ஹாஸ்டல் ஆன பிக் பாஸ் வீடு!
24/7 ஒளிப்பரப்பில் மற்றொரு சூப்பர் விஷயம் நடந்தது. இரவு விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகு பெண்கள் அணி ஜாலியாக லிவிங் ஏரியாவில் அரட்டை அடித்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிர்புறத்தில் வெளியே சோஃபா மீது ஆண்கள் அணி பாட்டு பாடி கொண்டிருந்தது. பெண்கள் அணி கூட்டாக ரஞ்சித்தை கலாய்த்து கொண்டிருந்தனர். அவர் கையை அசைத்து அசைத்து பாட்டு பாடுவதை ஜாடையாக பெண்கள் அணி செய்து கொண்டிருந்தது.
ஒருகட்டத்தில் ரஞ்சித் பெண்கள் அணி தன்னை நோட்டமிடுவதை பார்த்து விட்டார். அவர் வெட்கப்பட்டது எல்லாம் வேற லெவல். உடனே பெண்கள் அணி அவரை பார்த்து நடனம் ஆடி பாட்டு பாடினர். அதுவும் ஒட்டுமொத்த பெண்கள் அணியும் சேர்ந்து நாகினி ஸ்டெப் போட்டு ரஞ்சித்தை உற்சாகப்படுத்தியது. இந்த காட்சிகள் பார்க்கவே ஜாலியாக இருந்தது. ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண்களில் இரவு நேர அரட்டை போன்று இருந்தது.
இந்த Fun element தான் இத்தனை நாளாக மிஸ்ஸானது. ஆனால் அதனை ஜாக்குலின் கொண்டு வந்து விட்டார். ஜாக்குலின் இந்த வார இறுதிக்கு பிறகு தனக்குள் இருந்த ஜாலியான கேரக்டரை வெளியே கொண்டிருக்கிறார். இது அவரது மிகப்பெரிய ப்ளஸ். பெண்கள் அணி பலமாகி வருகிறது. ஆட்டத்தின் போக்கு இனி திசைமாறும்.