பிக் பாஸ் தமிழ்
Bigg Boss TamilVijay tv

Bigg Boss 8 : நாரதர் வேலையை பார்த்த விஜய் சேதுபதி ; வலையில் சிக்கியது யார்? | Day 07

மக்கள் தீர்ப்புக்கான நாள். பிக்பாஸ் சீசன் 8 முதல் எவிக்‌ஷன். நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களை சம்பவம் செய்த விஜய்சேதுபதி. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்... இது BB Tamil 8 Day 07.
Published on

சுருக்கமாக, புரியுற மாதிரி பேசுறார் என்பதே விஜய்சேதுபதி குறித்த மக்களின் தீர்ப்பு.

பஞ்சாயத்து தலைவராக, பிக்பாஸ் ‘Host’ ஆக விஜய்சேதுபதியின் ஸ்டைல் தனித்துவமாக இருக்கிறது. பேசிக் கொண்டிருக்கும் போது நோஸ்கட் செய்வது, நீங்க பேசுறது போர் அடிக்குது, உங்க கிட்ட பேச எதுவுமில்லை உக்காருங்க என்பது, ஒரு வார்த்தையை மாற்றினால் கூட திருப்பி அட்டாக் செய்வது என சேதுபதி மக்களின் பிம்பமாக இருக்கிறார். சுருக்கமாக, புரியுற மாதிரி பேசுறார் என்பதே விஜய்சேதுபதி குறித்த மக்களின் தீர்ப்பு.

விஜய்சேதுபதி கடுமையாக நடந்துகொள்கிறார் என்று வைக்கப்படும் விமர்சனத்துக்கு நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே விளக்கம் கொடுத்து துவங்கியது சிறப்பு. போட்டியாளர்களிடம் கடுமையாக நடப்பதற்கு காரணம், ''கன்ஃபர்ட்டாக இருந்துவிடுவர்கள். விளையாட்டில் கவனமிருக்காது. சேஃப் கேம் விளையாடுவதற்கான இடம் இதுவல்ல'' என்ற பொருள் விளக்கம் அவசியமாக இருந்தது.

Bigg Boss Tamil
Ranjith and Ravinder Vijay tv

‘நேற்றைய நிகழ்ச்சி பற்றி ஏதும் கருத்து இருக்கா’ என்று விசே கேட்கவும் முதல் ஆளாக எழுந்தார் ரஞ்சித். ''ரவீந்திரனை தவறா நினைச்சிட்டேன்'' என்று வருந்தவும், '‘மன்னிப்பு கேட்டீங்களா?’' என்றார் விசே. இருவரும் கட்டியணைத்து அன்பை பகிர்ந்துகொண்டது பஞ்சாயத்து பக்குவமா முடிந்ததை காட்டியது.

விசே-விடமிருந்து வந்த முதல் கேள்வி தர்ஷிகாவின் கேப்டன்ஷிப் பற்றியதாக இருந்தது. பெரிதாக விமர்சனங்கள் இல்லையென்றாலும், கேப்டன் பவரை பயன்படுத்தாதது, பெண்களுக்கு ஆதரவாக விளையாடியது என ஒரு சில கருத்துகள் மட்டும் எழுந்தது. சொல்லப் போனால், கேப்டனுக்கான பெரிய வேலை என்று எதுவும் இந்த வாரம் இல்லாதது கூட ஒரு காரணமாக இருக்கலாம். கேப்டனாக தர்ஷிகா எதுவும் பெரிதாக செய்த மாதிரி தெரியவில்லை என்றே கூறலாம்.

Bigg Boss Tamil
SachanaVijay tv

சாச்சனாவின் ஓவர் பேச்சுக்கு இன்றும் ஒரு குட்டு கொடுத்தார் விசே. அதற்காக வீக் ப்ளேயர்ஸ் பிரச்னையை கையில் எடுத்தார். ஆண்கள் டீமில் வீக் யாரென்று சொன்னது போல், பெண்கள் டீமின் வீக் பிளேயரை சொல்லாமல் மறைத்துவிட்டார் என்று புகாரை எழுப்பிவிட்டார். ரவீந்திரனிடம் அன்ஷிதா, சுனிதா, செளந்தர்யா மூவரும் வீக் என்று சொன்ன சாச்சனா, ஏன் பெண்களிடம் அதைச் சொல்லவில்லை என்று நாரதர் வேலையை பார்த்துவிட்டார் விசே.

''பெண்களுக்காக விளையாடுறேன்னு சொன்ன நீ, இதை ஏன் சொல்லாமல் விட்டாய்?’' என்றதும் சாச்சனாவுக்கு வியர்த்து கொட்டியது. ஒவ்வொரு தவறையும் சரியாக கவனத்தில் கொண்டு பேசியதில் விஜய்சேதுபதியின் இந்த மூவ் கச்சிதமான ஒன்று.

பெண்கள் எப்போதும் எமோஷனலானவர்கள் என்பதால் இந்த விஷயத்துக்கும் எமோஷனல் ஆவார்கள் என்று தெரிந்தே பிரேக் விட்டு நழுவினார் விசே. உடனடியாக, சுனிதாவும் அழுதுகொண்டே ரூமுக்குச் சென்றார். இன்றைய நாளுக்கான கண்ணு வேர்க்கும் மொமன்ட் சுனிதாவிடமிருந்து வந்தது. '‘சாச்சனா மீது வைத்திருந்த நம்பிக்கை உடைஞ்சிடுச்சு. நம்ம கிட்ட சொல்லிருக்கலாம். எல்லார் முன்னாடியும் சொன்னது கஷ்டமா இருக்கு'’ என்று வருந்தினார் சுனிதா. எல்லோரும் ஃபீல் பண்ணி முடிந்ததும் மீண்டும் ஆட்டத்தை தொடர்ந்தார் விசே.

''பெண்கள் அணியிலிருந்து பவித்ராவை ஆண்கள் வீட்டுக்கு அனுப்பியது சரியா'' என்ற கேள்விக்கு நேர்மையான பதில் ஜாக்குலினிடமிருந்து வந்தது. ''எனக்கு முதல்ல உடன்பாடு இல்லை. அதுக்குப் பிறகு, சரியா விளையாடுறாங்கன்னு தான் தோணுது. பாவம்னு அனுப்பியதுல உடன்பாடு இல்லை’' என்றார் ஜாக்.

அப்படியே, பிராங்க் பஞ்சாயத்தை ஓபன் செய்தார் விசே. ''ரவீந்திரன் நாமினேஷனுக்காக என்று கூறிய போது நீங்களும் தானே இருந்தீங்க பவித்ரா?’' என்று இழுத்து விட்டார். பவித்ரா முதலில் தெரியாது என்றாலும், பின்னர் ஒப்புக்கொண்டார்.

Sunitha and Anandhi
Sunitha and Anandhi

ப்ராங்க் என்று நினைத்து விளையாடிருந்தால் பிரச்னையில்லை. நாமினேஷனுக்காக என்று தெரிந்தும் பெண்களிடம் சொல்லாமல் இருந்திருந்தால் பவித்ரா செய்தது பெரிய தவறு என்பதை ஒப்புக் கொண்டார் தர்ஷிகா.

அதுபோல, ''பவித்ரா கோலம் போடத் தெரிஞ்சும் தெரியாதது போல டாஸ்க்கில் விளையாடியது சந்தேகமாக இருக்கு'’ என்று செக் வைத்தார் தீபக்.

பவித்ரா அவங்க அணிக்காக விளையாடுறாங்க. ஆண்கள் வீட்டுல நடக்குற பிரச்னைகள் பெண்களுக்கு தெரியுது. ஆனா, பெண்கள் வீட்டுல நடக்குற எதுவும் ஆண்களுக்கு தெரியவில்லை என முத்து மீது விமர்சனத்தை வைத்தார் அருண்.

பிக் பாஸ் தமிழ்
Bigg Boss 8 : குழப்பவாதி தர்ஷா, திருட்டுதனம் செய்த ஜாக்குலின், ஒரு குறும்படம் வெயிட்டிங்! | Day 4

பவித்ராவும் முத்துவும் சரியாகத்தான் விளையாடுகிறார்கள் என ஜெஃப்ரி சொன்னது ‘நாம யார் வம்புக்கும் போறதில்லை' என்பது போல இருந்தது. விஜய்சேதுபதி ஜெஃப்ரியை வம்புக்கு இழுத்த இடம் கலகல மொமண்ட்.

''ஜெஃப்ரிய டபுள் ஏஜென்ட் மாதிரி தான் பாக்குறோம்'' என்றார் தீபக். ''24 மணிநேரத்துல 12 மணிநேரம் பெண்களோட இருக்கான். மீதி 12 மணிநேரம் எங்க கூட இருக்கான். ஜெஃப்ரியை எப்படி புரிஞ்சிக்கிறதுன்னு தெரியலை'' என இன்றைய நாளுக்கான காமெடி கன்டென்ட் ஜெஃப்ரியிடமிருந்து வந்தது.

உதாரணமாக, ''கேப்டன் வாக்கிங் போகணும்னா கூட போவேன்’''னு சொன்னதும் விழுந்து சிரித்தார்கள். '‘சார்.. சீரியஸா பேசிட்டு இருக்கேன். சிரிக்கிறாங்க சார். யாருக்காவது கஷ்டமா இருந்தாங்கன்னா ஈஸி ஆக்கிடுவேன்'’ என்ற ஜெஃப்ரியிடம் ‘'எனக்கு பல கஷ்டம் இருக்கு. என்னை கொஞ்சம் ஈஸி ஆக்கு'’ என்றார் சேதுபதி.

பிக் பாஸ்
PavithraVijay tv

வாத்தியாரான விஜய் சேதுபதி :

'‘உப்புக்கு பதிலா தண்ணீர்'’ என நீங்களே பேசி முடித்துக் கொள்வது சரியா? சுமூகமாக எல்லாவற்றையும் மாற்றிவிட்டால் எதற்கு பிக்பாஸ் வீட்டுக்கு வர வேண்டும். காம்ப்ரமைஸ் பண்ணிகிட்டா கேம் எப்படி சுவாரஸ்யமாக இருக்கும். தவறுகளை சுட்டிக் காட்டுங்க. கரம் மசாலா விஷயத்தை பெருசுபடுத்திருக்கணும். உப்பு இல்லாம எப்படி சமாளிக்கிறது என்று யோசிச்சிருக்கணும் என வீட்டில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டி விஜய்சேதுபதி பேசியது சுவாரஸ்யமாக இருந்தது.

பிக் பாஸ் தமிழ்
Bigg Boss 8 : குரூப்பிஸம் புகார், சாச்சனா என்ட்ரி ஏற்படுத்திய மாற்றம் : DAY 05

மக்கள் தீர்ப்பு :

நாமினேஷனில் இருக்கும் ஜாக்குலின், செளந்தர்யா, அருண், ரஞ்சித், ரவீந்திரன் மற்றும் முத்துக்குமரன் என ஆறு பேரும் ஒரே இடத்தில் அமர்ந்தனர். யார் வெளியே போக வாய்ப்பு இருக்கு என்று கேட்டதும் செளந்தர்யா பெயரைச் சொல்ல சவுண்டு சத்தம் வெளியே கேக்குது. நீங்க சேஃப் என்றார் விசே. தொடர்ந்து, அருணும், முத்துக்குமரனுக்கும் மக்கள் ஆதரவு இருந்ததால் தப்பித்தனர்.

ரவீந்திரனும், ரஞ்சித்தும் ‘நானே போவேன்னு எனக்கு ஃபீல் ஆகுது’ என்று ஒரே கருத்தைக் கூறினர். ரஞ்சித்தும், ரவீந்திரனும், ஜாக்குலினும் ''வெளியே போனாலும் ஹேப்பிதான்... நோ டென்ஷன்'' என்றார்கள். இறுதியாக, எவிக்‌ஷனாகும் அந்த நபரை அறிவித்தார் விசே. மக்கள் தீர்ப்பின் படி ரவீந்திரன் வீட்டை விட்டு வெளியேறினார்.

பிக் பாஸ் தமிழ்
பிக் பாஸ் தமிழ்Vijay tv

உடல் நிலை காரணமாகவும், கேமில் இவரின் என்டர்டெயின்மென்ட் குறைவாக இருந்ததாலும் மக்கள் ஆதரவு ரவீந்திரனுக்கு கிடைக்கவில்லை. ரவீந்திரன் மேடைக்கு வந்ததும் ஒன் வீக் மேஷ் அப் போடப்பட்டது. அந்த மேஷ் அப் கன்டென்ட் சூப்பராக இருந்தது. ரவீந்திரன், '‘ஒல்லியாகி தான் வெளிய அனுப்புவாங்க அப்டின்னு நினைச்சேன். அவங்க சாப்பாட்டுல இருந்து தப்பிச்சிட்டேன். என்னை எல்லோரும் மிஸ் பண்ணுறேன்னு உருட்டுவாங்க பாருங்க சார்’' என்றார். அவர் சொன்னது போலவே, வீட்டிலிருந்து மிஸ்யூ உருட்டுகள் வந்ததும் ஆடியன்ஸ் கைதட்டி சிரித்தனர். இந்த கன்டென்ட்டை வீட்டுக்குள் இருந்து கொடுத்திருக்கலாம் ரவி சார்.

பிக் பாஸ் தமிழ்
Bigg Boss 8 : ஒட்டுமொத்த கூட்டத்தையும் லெஃப்ட் ரைட் வாங்கிய விஜய்சேதுபதி : நடந்தது என்ன? | Day 6

ரவீந்திரன் செய்த சம்பவம்

''உங்க ஸ்டைல்ல எல்லோரையும் ரிவ்யூ பண்ணுங்க'' என்றார் விசே. ''மொதல்ல எனக்கு ரிவ்யூ கொடுங்க'' என்று விசே கேட்க... ''நீங்க பங்கம் பண்ணுறீங்க. செஞ்சி விட்டுட்டீங்க சார்'' என்றார். தொடர்ந்து, வீட்டிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் நேர்மையான விமர்சனங்களைக் கொடுத்தார் ரவீந்திரன்.

ஜெஃப்ரியை வாயை கன்ட்ரோல் செய்ய சொன்னது, விஷாலை மட்டுமே நல்ல என்டர்டெயினர் என்றது, தர்ஷாவை நீ விளையாடுறதுல பாதி Fake என்றது, சுனிதாவை ரியல் என்றது, செளந்தர்யா சீட்டை தேய்க்காத என்றது , தர்ஷிகாவை கேடி, அதிகம் பேசாதே சாச்சனா, பயப்படாதே ஆனந்தி என ஒவ்வொருவருக்கும் இவர் சொன்ன விமர்சனம் சரி என்றே கூறலாம். ரவீந்திரன் நல்ல போட்டியாளர் இல்லை. ஆனால், நல்ல ரிவ்யூவர் தான்.

பொதுவாக, பிக்பாஸ் வீட்டின் முதல் வாரம் எப்போதுமே கொஞ்சம் சுமாராக தான் இருக்கும். இந்த வீட்டில் டாக்ஸிக் என யாருமில்லாததால் ரொம்ப சுமாராகப் போனது. அடுத்தடுத்த வாரங்களில் வேகம் எடுக்கவே இந்த வாரம் டிரில் க்ளாஸ் எடுத்தார் விஜய்சேதுபதி. அடுத்த வாரம் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற டேக்லைன் உண்மையா என்பதும் தெரிந்துவிடும்.

பிக் பாஸ் தமிழ்
பிக் பாஸ் தமிழ் 8 : முதல் வார எலிமினேஷனில் 6 பேர்... யாரையும் SAVE செய்யாத விஜய் சேதுபதி!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com