Prince Hisahito
Prince Hisahito Twitter

ஜப்பான் அரச குடும்ப விநோதம்... 40 ஆண்டுக்குப் பிறகு 18 வயதை பூர்த்தி செய்யும் ஆண் வாரிசு !

ஜப்பானில் நிலவிவரும் மக்கள் தொகை வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் வயதானவர்களின் எண்ணிக்கை அந்நாட்டின் அரச குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை
Published on

ஜப்பானில் நிலவிவரும் மக்கள் தொகை வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் வயதானவர்களின் எண்ணிக்கை அந்நாட்டின் அரச குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை என்பதே பரிதாப நிலை. ஏனெனில், சமீபத்தில் ஜப்பான் இளவரசர் ஹிசாஹிட்டோவின் 18வது பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. விஷயம் என்னவென்றால், கடந்த 40 ஆண்டில் 18 வயதை பூர்த்தி செய்து இளைஞர் பருவத்தை அடையும் முதல் ஆண் வாரிசு இவர்தான்.

தற்பொழுது ஜப்பானின் பேரரசராக நருஹிட்டோ அரியணையில் இருக்கிறார். இவரின் மருமகனே இளவரசர் ஹிசாஹிட்டோ. இவர்களது குடும்பத்தில் கடைசியாக 18 வயதை பூர்த்தி செய்தது ஹிசாஹிட்டோவின் தந்தை பட்டத்து இளவரசர் அகிஷோனா.

ஜப்பான் அரச குடும்பம்
ஜப்பான் அரச குடும்பம்Twitter

1985-ல் அவர் 18 வயதை பூர்த்தி செய்து இளைஞரானார். அதன்பிறகு, ஜப்பானின் தி இம்பெரல் குடும்பத்தின் அடுத்த ஆண் வாரிசு 18 வயதை எட்ட 40 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

Prince Hisahito
இஸ்ரேல் மக்களிடம் மன்னிப்பு கோரிய நெதன்யாகு... போர் நிறுத்தம் சாத்தியமாகுமா?

ஆயிரமாண்டுக்கு மேலாக ஜப்பானை ஆட்சி செய்யும் இக்குடும்பத்தில் தற்பொழுது 17 உறுப்பினர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். அதில் 4 பேர் மட்டுமே ஆண்கள் என்பது வேடிக்கையான தகவல். ஜப்பானின் அரச குடும்பத்தில் மக்கள் தொகை வீழ்ச்சிக்கு அவர்கள் வைத்திருக்கும் சட்ட திட்டங்களே காரணம்.

இளவரசர் ஹிசாஹிடோ
இளவரசர் ஹிசாஹிடோ Twitter

1947 இம்பீரியல் ஹவுஸ் சட்டத்தின் படி ஆண்கள் மட்டுமே அரியணை ஏற அனுமதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு அரியணை ஏறுவதற்கு அனுமதி இல்லை. அதுமட்டுமின்றி, அரச குடும்பத்து பெண்கள் சாமானிய மக்களை திருமணம் செய்துகொண்டால், அவர்கள் அரச குடும்ப தகுதியை இழந்துவிடுவார்கள்.

அரச குடும்பத்தின் லைம் லைட்டிலிருந்து மறக்கப்படிக்கப்படுவார்கள். இப்படியான சட்டத்தினால், அரச குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லாமல் பெரும் சிரமத்தில் இருப்பதாக தெரிவிக்கிறது ஜப்பான் டைம்ஸ்.

பேரரசர் நருஹிட்டோ மற்றும் மசாகோ தம்பதிக்கு பிறந்தவர் இளவரசி ஐகோ . பேரரசரின் பெண் வாரிசால் அரியணை ஏற முடியாது. சட்டத்தில் அதற்கு இடமில்லை. ஆனால், ஐகோவை பேரரசியாக பார்க்க ஜப்பான் மக்கள் விரும்புகிறார்கள். அந்த அளவுக்கு ஜப்பானில் பிரபலமானவர்.

இந்நிலையில், பேரரசரின் சகோதரர் அகிஷினோவின் மகன் ஹிசாஹிட்டோ. அரச குடும்பத்தில் இருக்கும் ஆண் வாரிசு என்பதால் பேரரசராக தகுதியடைந்துள்ளார். ஆக, நருஹிட்டோவுக்குப் பிறகு அகிஷினோவும், அவரைத்தொடர்ந்து மகன் ஹிசாஹிட்டோவும் எதிர்காலத்தில் பேரரசராவார்கள்.

Prince Hisahito
இளவரசர் ஹிசாஹிடோ Twitter

ஹிசாஹிட்டோ பிறப்பதற்கு முன் வரை பெண்களை அரியணையில் ஏற்றுவதற்கான கோரிக்கை முன்மொழியப்பட்டது. 2006ல் இவர் பிறந்த பிறகு அந்த கோரிக்கை வலுக்கவில்லை.

அதோடு, பேரரசராக வேண்டுமெனும் எந்த விருப்பத்தையும் தற்பொழுதுவரை இவரும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Prince Hisahito
கிறிஸ்துமஸ் பரிசாக தந்தை வாங்கித் தந்த துப்பாக்கி...ஆசிரியர்கள், சக மாணவர்களை சுட்டுக்கொன்ற சிறுவன்!

“ இப்போதைக்கு என்னுடைய உயர்கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அதோடு, என்னுடைய இளமை பருவத்தை கொண்டாடத்துடன் நேசிக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் இளவரசர் ஹிசாஹிட்டோ.

Prince Hisahito
2019 இல் அகிஷினோவின் இளவரசர் ஹிசாஹிட்டோ டோக்கியோவின் பங்கியாவில் உள்ள ஓகனோமிசு பல்கலைக்கழக தொடக்கப் பள்ளியில் பட்டம் பெற்றார்.Twitter

கடந்த 2022-ல் அரச குடும்பத்தின் பெண் உறுப்பினர்களையும் அரச பதவிகளில் அனுமதிக்கும் திட்டத்தை ஜப்பானிய வல்லுநர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கையாக வைத்தனர். இது, அரச குடும்பத்தில் மக்கள் தொகை குறைவதை தடுக்கும். அதோடு, அரச குடும்பத்திலிருந்து வெளியேறிய அல்லது தொலைதூர உறவினர்களிடமிருந்து ஆண் சந்ததியினரை தத்தெடுக்கவும் பெரிதளவில் உதவும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்த எந்த முடிவும் இன்றுவரை எட்டப்படவில்லை.

logo
News Tremor
newstremor.com