Bigg Boss Tamil 8 : சுனிதாவை கடுப்பேற்றும் சவுண்டு... ஃபுல் வன்மம் Mode ஆன் | Day 23
ஒவ்வொரு வாரமும் வீட்டுப்பணி டாஸ்க்கில் சுவாரஸ்யம் இருக்கும். அப்படி, இந்த வாரத்துக்கான இரண்டு வீட்டுக்குமான ‘வீட்டுப்பணி’ செய்யப்போவது ஆண்களா பெண்களா என்றூ தெரிந்துகொள்ள ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ எனும் போட்டி நடந்தது. கையில் டம்மி வாளும் கேடயமும் வைத்து சண்டைப் போட வேண்டும். கேடயத்தை கீழ விழ வைத்தால் வெற்றி. இந்த போட்டி செம ஜாலியாக ஆரம்பித்தது.
ஆண்கள் டீமே தொடர்ந்து வெற்றிப் பெற்றனர். இதில், பெண்கள் டீம் சார்பாக அன்ஷிதாவும், ஆண்கள் டீம் சார்பாக செளந்தர்யாவும் விளையாடினர். அன்ஷிதா கேடயத்தை கையில் பிடித்ததால் செளந்தர்யா அவுட் ஆனார். ஆனால், தவறாக விளையாடியதால் ரீமேட்ச் நடத்தினர்.
இந்த முறை அன்ஷிதா அவுட். முதல்முறையாக, செளந்தர்யா தனியாக விளையாடி ஜெயித்தது இப்போதுதான். விளையாட்டில் ஜெயிக்கிறோம், தோக்குறோம் என்பதை தாண்டி ஆட்டத்தை சுவாரஸ்யப்படுத்தியது ரஞ்சித்தான்.
அவரின் யூனிக் ஸ்டைலான மூன் வாக்கில் நடனமாடிகொண்டே விளையாடினார். காமெடி என்னவென்றால், அவரது கேடயத்தை அவரே அடித்து விழ வைத்தார்.
இறுதியாக, இந்த வாரத்துக்கான வீட்டுப் பணி டாஸ்க்கில் ஆண்கள் வெற்றிப் பெற்றனர். அதன்படி, குக்கிங் பொறுப்பு ஆனந்தி, தர்ஷிகா, சாச்சனா ஏற்றுக்கொண்டனர். அதோடு, பாத்திரம் கழுவும் பொறுப்பு அன்ஷிதா சுனிதா இருவருக்கும். பாத்திரம் கழுவ கூட இரண்டு பேரும் ஜோடியா தான் வருவாங்க போல. தரை சுத்தம் செய்வது பவித்ரா, விஷால் மற்றும் பாத்ரூம் கிளினிங் ஜாக்குலின் என்று முடிவானது.
ஆள் மாறாட்டம் டாஸ்க்
கடந்த வாரம் வீக்லி டாஸ்க்கில் பிபி ஹோட்டலை நடத்தி இரண்டு டீமும் ரகளை செய்தனர். இந்த வாரத்துக்கான வீக்லி டாஸ்க் ‘ஆள்மாறாட்டம்’. அதாவது, ஒவ்வொருவரும் அந்நியனாக மாற வேண்டும். ஒவ்வொருவரும் யாராக நடிக்க வேண்டும் என்பது சொல்லப்படும். அவரைப் போல இமிடேட் செய்து நடிக்க வேண்டும். அவர்களின் முகமாக நீங்கள் எதை வெளிப்படுத்தப் விரும்புகிறீர்களோ வெளிப்படுத்தலாம் என்று அறிவித்தார் பிக்பாஸ்.
ட்விஸ்ட் என்னவென்றால், யாருக்கு யார் மீது பொறாமை,கோபம், விமர்சனம் இருக்கிறதோ அவர்களாக நடிக்க சொன்னது நல்ல மூவ். அதன்படி, ஜாக்குலினாக அன்ஷிதாவும், செளந்தர்யாவாக சுனிதாவும், சுனிதாவாக சாச்சனாவும், சாச்சனாவாக ஆனந்தியும், அன்ஷிதாவாக ஜாக்குலினும், ஆனந்தியாக செளந்தர்யாவும், பவித்ராவாக தர்ஷிகாவும், தர்ஷிகாவாக பவித்ராவும் நடிக்க வேண்டும்.
அதுபோல, ஆண்களில் அருண் சத்யாவாகவும், சத்யா அருணாகவும் மாற வேண்டும். ஜெஃப்ரி தீபக் ஆகவும், தீபக் விஷாலாகவும், விஷால் ஆக முத்துக்குமரனும், முத்துக்குமரன் ரஞ்சித் ஆகவும் மாறி நடித்தனர்.
இதில் ஹைலைட், செளந்தர்யா தான். சுனிதாவாக நடித்த செளந்தர்யா ஒட்டுமொத்த வன்மத்தையும் வெளிப்படுத்தினார். சுனிதா மேக்கப் போடுவது, குரலை உயர்த்திப் பேசுவது என சுனிதாவாகவே மாறி அசத்தினார். அன்ஷிதாவாக நடித்த ஜாக்குலினும் சுனிதாவுக்கு ஆறுதல் சொல்வது, யாரையும் அருகில் நெருங்க விடாமல் பார்த்துக் கொள்வதென நடித்தது செமையாக இருந்தது.
இந்தப் பக்கம், எல்லோர் மீதும் அருண் அக்கறை கொள்வது, யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாதென செய்யும் அட்ராசிட்டிகளை அப்படியே நடித்துக் காட்டினார் சத்யா. சத்யாவிடமிருந்து வந்த பெர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கவில்லை. என்டர்டெயின் பண்ணவில்லை, கேம் விளையாடுவதில்லை என்று சத்யா மீது விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால், இன்று பெர்ஃபாமன்ஸாகவும், போட்டியிலும் சத்யா அசத்தினார்.
இன்றைக்கான ஆள்மாறாட்டம் டாஸ்க் முடிந்ததும், ஒவ்வொருவரும் எப்படி நடித்தார்கள் என்ற பேச்சு ஆரம்பித்தது. நானெல்லாம் அப்படி நடக்கவே மாட்டேன் என சுனிதா புலம்பிக் கொண்டிருந்தார். இந்தப் பக்கம், ஆண்கள் டீமில் எல்லோரும் ஜாலியாக பேசி சிரித்துக் கொண்டனர்.
பலத்தைக் காட்டிய ஆண்கள் டீம்!
டெய்லி டாஸ்க் அறிவிக்கப்பட்டது. இந்த டாஸ்க்கிலும் ஆண்கள் பக்கம் காற்று வீசியது. ஆண்கள் டீமிலிருந்து சத்யா, முத்துக்குமரன், ஜெஃப்ரி கலந்துகொண்டனர். சத்யா ஆட்டத்துக்குள் வருவதால் விஷால், சுனிதா, சாச்சனா மூவரும் களத்தில் இறங்கினர். பலத்தை கொண்டு விளையாட வேண்டிய டாஸ்க் என்பதால் விஷாலை பெண்கள் அனுப்பியது ஸ்மார்ட் மூவ். ஆனால், சாச்சனாவுக்கு பதில் வேறு யாரையாவது அனுப்பியிருக்கலாம்.
சத்யாவும் முத்துக்குமரனும் தன்னுடைய மொத்த பலத்தைக் கொண்டு விளையாடினர். அதனால், விஷால், சுனிதா இருவராலும் ஈடு கொடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் கயிற்றை முத்துக்குமரன் கழுத்தில் போட்டு இழுத்தார். அதனால் மொத்த டீமும் பயந்துவிட்டது. கையில் பிடிக்க வேண்டிய கயிறை கழுத்தில் போட்டு இழுப்பது தவறு என சத்தங்கள் எழுந்தது.
ஒவ்வொரு முறையில் விளையாடி ஜெயிக்க வேண்டும் என்று முத்துக்குமரன் நினைக்கிறார். ஆனால், ரூல்ஸை மீறுகிறாரோ என்று தோன்றுகிறது. இந்த முறையும் முத்துக்குமரன் விளையாடியது சுவாரஸ்யமாக இல்லை. ஒரு சார்பாகவே கேம் சென்றதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு இல்லை.
கேமுக்கு ஏற்ற ஆட்களை அனுப்ப வேண்டும். சாச்சனா கேம் ஆட வருகிறார் என்றால் சத்யா விளையாடியிருக்க கூடாது. இன்னொரு பக்கம், சாச்சனாவை அனுப்பியிருக்க கூடாதென தங்களுக்குள் பேசிக் கொண்டனர் பெண்கள். குறிப்பாக, சத்யாவின் பலத்தில்தான் ஜெயித்தார்கள் என ஆனந்தி கூறினார். இந்த விளையாட்டைப் பற்றி விஜய்சேதுபதி வார இறுதியில் பேச அதிக வாய்ப்பு இருக்கிறது.
விளையாட்டில் சாச்சனாவுக்கு அடிபட்டதால் கன்ஃபெஷன் ரூமுக்கு அவரை அழைத்தார் பிக்பாஸ். இந்த முறையும் சாச்சனாவை அருண் தான் தூக்கிச் சென்றார். ஆபத்தா விளையாடுறீங்க என்று முத்துக்குமரனை கண்டித்தார் தர்ஷிகா. அதில் அக்கறையும் பொறுப்பும் இருந்தது தெரிந்தது.
இன்று பாத்திரம் கழுவ சென்ற அன்ஷிதா கிச்சன் இன்சார்ஜ் ஆன அருணிடம் அனுமதி கேட்கவில்லை. அதை பெரிய பிரச்னையாக்கியிருக்கலாம். ஆட்டத்தை சுவாரஸ்யப்படுத்த எதாவது செய்திருக்கலாம். ஆனால், இனிமேலாவது கேட்டுட்டுப் போங்க என்று சாஃப்ட் மோடில் பதில் கூறினார். அருணுக்கு இன்னும் பயிற்சி தேவை போல.
இன்றைய நாள் ஆண்கள் பக்கம் காற்று வீசியது. வீட்டுப்பணி, டெய்லி டாஸ்க் என அனைத்திலும் ஆண்கள் வென்றனர். ஆள்மாறாட்டத்தில் செளந்தர்யா கவனம் ஈர்த்தார். பெரிய விவாதமோ, கலவரமோ, விறுவிறுப்போ இல்லாமல் ஸ்மூத்தாக இன்றைய எபிசோட் முடிந்தது.